Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மே 27 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவமொன்றில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த இராசதுரை இராசமலர் (62 வயது) என்பவரே பலியானவராவார்.
இன்று காலை 9.30 மணியளவில் உலவுகுளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி ஆசிரியர் மீது அதே வீதியால் சென்ற உழவு இயந்திர பெட்டியொன்று மோதுண்டதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
உழவு இயந்திர பெட்டி மோதி விழுந்த ஆசிரியரின் தலையில் உழவு இயந்திரம் ஏறி நசியுண்டே ஆசிரியர் பலியாகக் காரணமாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .