2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் பஸில் நாளை யாழ். விஜயம்

Super User   / 2011 மே 28 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

முன்னாள் போரளிகளின் சுயதொழில் ஊக்குவிப்புக்காக கடன் உதவி வழங்குவதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ். மாட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புனர்வாழ்வு பெற்று குடும்பத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் தொழில் வாய்ப்புக்களை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பு கடன் உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X