2025 மே 21, புதன்கிழமை

யாழ். உதயன் செய்தியாளர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

Super User   / 2011 மே 28 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். உதயன் பத்திரிகையின்  அலுவலக செய்தியாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை இனந்தெரியாத குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது யாழ். போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் சண்டிலிப்பாயை சேர்ந்த 37 வயதான எஸ்.கவிதரன் என்பவரே தாக்கப்பட்டவராவார்.

இவர் இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் வைத்து ஜந்து பேர் கொண்ட இனமந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
படுகாயடைந்த இவர், தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .