Suganthini Ratnam / 2011 ஜூன் 01 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலிவடக்கு மீள்குடியேற்றப் பகுதிகளிலுள்ள கிணறுகளை இறைப்பதற்காக வழங்கப்பட்ட நீரிறைக்கும் இயந்திரம் 24 மணிநேரத்திற்குள் திருட்டுப்போன சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியான மாவிட்டபுரம் தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்திடம் மீள்ளெழுச்சித் திட்டத்தின் கீழ் இரண்டு புதிய நீரிறைக்கும் இயந்திரங்கள் யாழ். செயலகத்தினால் நேற்றுமுன்தினம் திட்கட்கிழமை வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட நீரிறைக்கும் இயந்திரங்கள் மல்லாகத்திலுள்ள தெல்லிப்பளை பிரதேச செஞ்சிலுவைச்சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அடுத்த நாள் காலையில் பார்த்தபோது இவ் இயந்திரங்கள் காணாமல் போயுள்ளன.
இது தொடர்பில் தெல்லிப்பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
10 minute ago
51 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
51 minute ago
51 minute ago