2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி யாழ். குடாநாட்டுக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 02 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி யாழ். குடாநாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.  ஜனாதிபதியுடன் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவும் யாழ். வரவுள்ளதாகவும்  அவர் கூறினார்.

கோப்பாய் நாவலர் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டுமாடி வகுப்புபறைக் கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் முகமாகவே  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவும் யாழ்.  வரவுள்ளனர்.  

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரசிங்கவின் மேற்பார்வையில் இராணுவத்தினரின் முழுமையான பங்களிப்புடன் இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X