2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புத்தூரில் மீட்கப்பட்ட சடலம் கழுத்து நெரிக்கப்பட்ட பின் தூக்கில்: பிரேத பரிசோதனை அறிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 28 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். புத்தூர்ப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் கழுத்து நெரிக்கப்பட்ட பின்னரே தூக்கில் தொங்கவிடப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி எவரெட்ஸ் மைதானத்திலுள்ள  கால்பந்தாட்ட கோல் கம்பத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் இளைஞரொருவரின் சடலம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டது.

பிரேத பரிசோதனை நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது கைகளிலும் கால்களிலும்  உரசல் காயங்கள் காணப்படுகின்றன. குறித்த இளைஞன் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்த கயிறு இறுக்கி தற்கொலை செய்யவில்லையென பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X