2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் குற்றவாளிகளின் கைது குறைவு; குற்றச்செயல்கள் அதிகரிப்பு: அரச அதிபர்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 29 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை பதிவு செய்வதையே யாழ். மாவட்டப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரியவில்லையெனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் நேற்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற அதேவேளை,  குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவோ அல்லது விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவோ தெரியவில்லையெனவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள்  குற்றச்செயல்கள், கொலைகள், கொள்ளைச் சம்பங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.  யாழ். பொலிஸார் குற்றச்செயல்களை மாத்திரம் பதிவு செய்துவிட்டு  தங்களது கடமை முடிந்து விட்டதாக நினைக்கின்றார்கள்.
குற்றவாளிகளை கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படுவது குறைவடைந்துள்ளதால், யாழ்ப்பாணத்தில்  குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களும்  அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றனரென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X