2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழ். ஆழ்கடலில் ட்றோலர்களில் மீன்பிடிப்பதற்கு அனுமதி

Super User   / 2011 ஜூலை 05 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கடல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு ட்றோலர்கள்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கடற்றொழிலாளர் சமாச தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்தார்.

கடந்த 2010 மார்ச் 23ஆம் திகதி முதல் ஆழ்கடல் பகுதியில் ட்றோலர்களில் தொழில் செய்வது தடைசெய்யப்பட்டு இருந்தது. மீனவ சமுதாயத்தின் வறுமை நிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு கடற்றொழில் நீரியல்துறை அமைச்சு ஜுலை 5ஆம் திகதி முதல் ஆழ்கடல் மீன்பிடி ஆதிவேக ட்ரோலர் படகுகளில் மீன்பிடிப்பதற்கான அனுமதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு ட்றோலர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதனால் கடற்றொழிலாளர்கள் இந்திய எல்லை பகுதிக்கு சென்று மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X