2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ்.மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் றெமிடியஸே: சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி

Menaka Mookandi   / 2011 ஜூலை 06 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் றெமிடியஸையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நியமித்துள்ளனர். அவரின் தலைமையின் கீழ்தான் யாழ். மாநாகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யாழ். மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் றெமிடியஸின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து வருகிறது. அவர் யாழ்.மாநகர சபையில் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவரின் மீது தமிழ் தேசியக் கூட்டமைபு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்.
 
றெமிடியஸின் தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து நாம் எதுவும் செய்யமுடியாது. அவருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாநகரசபை எதிர்கட்சி உறுப்பினருடன் முரண்பாடுகள் இருக்குமானால் அது குறித்து நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது.

யாழ்.மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் றெமிடியஸின் செயற்பாடுகள் எமது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறுவதாக இருக்குமாயின் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றிய யாழ்.மாநகரசபை எதிர்கட்சியினருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X