2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்டத்தில் இரு பிரதேச செயலர் பிரிவுகளில் மீள்குடியேற்றம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 20 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் இரண்டு பிரதேச செயலர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரிப் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த எழுதுமட்டுவாள், வடமாராட்சி கிழக்கில்  நாகர் கோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக என்று யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை காலை சாவகச்சேரிப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள எழுதுமட்டுவாள் கிராம அலுவலர் பிரிவில்  278 குடும்பங்களைச் சேர்ந்த 991 பேரும் நாளை வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ள வடமாராட்சி கிழக்கில் நாகர் கோவில் பகுதியில்  683 பேரும் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X