Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 20 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். கஸ்தூரியார் வீதிக்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடையேயான யாழ். மாநகரசபைக்குச் சொந்தமான வண்ணான்குளம் என்று அழைக்கப்படும் காணியில் அமைக்கப்படும் தொடர்மாடிக் கட்டிடத்தை தடைசெய்யும் வண்ணம் வரியிறுப்பாளரும் முன்னாள் யாழ். மாநகரசபை ஆணையாளரும் தமிழரசுக்கட்சி உபசெயலாளருமான சி.வீ.கே.சிவஞானத்தால் யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ். மேல் நீதிமன்றால் நேற்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ். மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ, பிரதம கணக்காளர் ந.யோகேந்திரராஜா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மாநகரசபையின் வண்ணான்குளம் என்ற பகுதியை பல மாடிக் கட்டிட தொகுதியை அமைப்பதற்கு தனியார் முதலீட்டாளருடன் ஒப்பந்தம் செய்து வழங்கியமை தவறானது எனத் தெரிவித்து, கட்டப்படவிருக்கும் கட்டித்தொகுதி செயல்பாட்டை தடுத்து நிறுத்தக்கோரி இவ்வழக்கை அவர் எதிராக தாக்கல் செய்திருந்தார்.
முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரதிவாதிகளான யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராச, யாழ். மாநகர ஆணையாளர் மு.செ.சரவணபவ, பிரதம கணக்காளர் யோகேந்திரராஜா ஆகியோர்களது சார்பில் மனுவுக்கான ஆட்சேபனைகள் சட்டத்தரணி அ.இராஐரட்ணத்தினால் முன்வைக்கப்பட்டன.
யாழ். மாநகரசபை கூட்டிணைக்கப்பட்ட குழுமமாக இருந்தும் அதனை பிரதிவாதியாக மனுவில் காட்டாது தவிர்த்தமை 13ஆம் 16ஆம் யாப்புத் திருத்த ஏற்பாடுகளுக்குப் புறம்பாக தமிழ்மொழியில் மனுத்தாக்கல் செய்யாது ஆங்கிலமொழியில் தாக்கல் செய்தமை, 4ஆம் பிரதிவாதியான ஆளுநர் வடமாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரத்தைப் பிரயோகிப்பதால் சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் காட்டத் தவறியமை.
மாநகரசபை விதி 307இற்கு அமைய வழக்குக்கான ஒருமாத கால முன்னறிவிப்பு பிரதிவாதிகளுக்கு வழங்காமை போன்ற பூர்வாங்க ஆட்சேபனைகள் மாநகரசபையின் சட்டத்தரணி அ.இராஜரட்ணம் முன்வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago