Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 21 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
'முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்' என்ற வாசகம் பொறித்த துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி அமைப்பாளரும் சாவகச்சேரி ட்ரிபேக் கல்லூரி அதிபருமான அருந்தவபாலன் நேற்று புதன்கிழமை இரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாளைமறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கையையொட்டி இவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைக்காக இவர் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இவரது கைது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
V.John Thursday, 21 July 2011 04:44 PM
என்ன கொடுமையடா இது ?
Reply : 0 0
sakeena, Nelugollakada. Thursday, 21 July 2011 06:19 PM
இது ஒரு கொடுமையும் இல்லை. அப்பாவி ஜனம் அழிந்ததற்கு யார் காரணம்? நடந்து முடிந்தவைகளைப் பேசி அரசியல் லாபம் தேடுகின்றீர்களா...? புலிகள் ஒரு குற்றமும் செய்யவில்லையா...? தண்டனை என்று வரும் போது குற்றவாளிகள் யாவரும் தண்டிக்கப்படல் வேண்டும்....
Reply : 0 0
thankasugi Thursday, 21 July 2011 07:35 PM
sakeena ungalakku thamil makkalin nilamai puriyala
Reply : 0 0
Hamza Thursday, 21 July 2011 09:33 PM
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ......
Reply : 0 0
sakeena, Nelugollakada. Thursday, 21 July 2011 11:04 PM
நிலைமை புரியாமலில்லை இதெல்லாம் யாரால் வந்தவினை,தமிழ் மக்களை இவ்வாறு சீராக்க வேண்டாம். எங்களை வாழவிடுங்கள்,தொன்னூரிலிருந்து வாழ்ந்த முகாம் வாழ்க்கை போதும்....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago