2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தேர்தல் சுவரொட்டிகள் கட்அவுட்டுகள் அகற்றப்படாதிருப்பதாக புகார்

Super User   / 2011 ஜூலை 21 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுமையா றிஸ்வி, கவிசுகி)

யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் சுவரொட்டிகள், கட் அவுட்டுகள் போன்ற தேர்தல் பிரசார சாதனங்கள் பொலிஸாரால் அகற்றப்படவில்லை என தேர்தல்கள் திணைக்களத்திற்கு பல புகார்கள் கிடைத்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று வியாழக்கிழமை கூறினார்.

இந்த பகுதிகளில் பல தேர்தல் கூட்டங்கள் நடைபெற்றன. இதன்போது பயன்படுத்தப்ட்ட தேர்தல் பிரசார சாதனங்களே அகற்றப்படாமல் உள்ளன என பொலிஸார் கூறியதாக தேசப்பிரிய தெரிவித்தார்.

எனினும் இவை விரைவில் அகற்றப்படும் என தேர்தல்கள் திணைக்களத்திடம் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, தேர்தல் வன்முறை குறித்து முன்னர் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறாத பகுதிகளிலும் இம்முறை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

ருவன்வெல்ல, சிலாபம் நகர சபை பகுதிகளிலிருந்து பாரதூரமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என அவர் கூறினார்.

குண்டர்களின் நடமாட்டம், முறையான இலக்கத் தகடு இல்லாத வாகனங்கள், மிரட்டல் சம்பவங்கள் குறித்து  முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர்கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X