2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் வயோதிபரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2011 ஜூலை 22 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,தாஸ்)
யாழ். கைலாசப்பிள்ளை ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள பாழடைந்த வீட்டிலிருந்து வெட்டுக்காயங்களுடன் வயோதிபர் ஒருவரின் சடலத்தை யாழ். பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்டுள்ளனர்.

யாழ். மவுன்காமம் வீதி, குருநகரைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான சில்வெஸ்டர் ஜேசுதாஸ் (வயது 68) என்பவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மதுபான நிலையமொன்றில் மது அருந்திக்கொண்டிருந்த வேளை இனந்தெரியாத இருவரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லையென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X