2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஹெலிகொப்டர், படகு மூலம் தீவகப்பகுதிகளின் வாக்குப்பெட்டிகள்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 22 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள  உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குப்பெட்டிகளை தீவுப்பகுதியிலிருந்து எடுத்து வருவதற்கு ஹெலிகொப்டர், கடற்படையினரின் அதிவேகப்படகு ஆகியன பயன்படுத்தப்படவுள்ளதாக யாழ். அரசாங்க அதிபரும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

தீவகப் பகுதிகளில் குறிப்பாக நெடுந்தீவுப் பகுதியில் வாக்களிக்கப்பட்ட பின்னர் வாக்குப்பெட்டிகள் ஹெலிகொப்டர் மூலமும் ஏனைய கடல்வழித் தொடர்புடைய தீவுப் பகுதிகளிலிருந்து வாக்களிக்கப்பட்ட   வாக்குப்பெட்டிகள்; கடற்படையினரின் அதிவேகப்படகுகள் மூலமும்  வாக்குகள் எண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்படுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, வாக்களிக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் எடுத்துவரப்படுகின்றபோது தேர்தல் முறைகேடுகள்  ஏதும் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் உண்டெனவும் இதனைத் தடுப்பதற்கு தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளில் ஒருவரையாவது ஹெலிகொப்டர் மற்றும் கடற்படையினரின் அதிவேகப்படகில் பயணிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இமெல்டா சுகுமார் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X