2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வலி. வடக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி அமோக வெற்றி

A.P.Mathan   / 2011 ஜூலை 23 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 12,065 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4919 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி 78 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 17062, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1643 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 18705 ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X