Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 28 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, யாழ். மாநகர சபை முஸ்லிம் பிரதிநிதிகள் இன்றைய சபைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
யாழ். மாநகர சபையின் இன்றைய கூட்டம் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் யாழ். முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்து கவனயீர்ப்பு பிரேரணையொன்று யாழ்.மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி எம்.எம். மோகேஸ்ஸினால் கொண்டுவரப்பட்டு சபையில் விவாதிக்கப்பட்டது
மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கென தனியான கொள்கை அமுலாக்கப்பட வேண்டும், யாழ். பிரதேச செயலரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் அல்லது குறித்த பிரதேச செயலரை மாற்ற வேண்டும், முஸ்லிம்களின் விவகாரத்திற்கு என முஸ்லிம் கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என மூன்று அம்சக் கோரிக்கைகள் கவனயீர்ப்பு பிரேரணையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
முஸ்லிம் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் கவனயீர்ப்பு பிரேரணையினை வரவேற்று ஆளும் தரப்பினரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டனர்
இந்நிலையில், முஸ்லிம் பிரதிநிதிகள், தமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை சபையை பகிஷ்கரிப்பதாக தெரிவித்து, சபையை விட்டு வெளியேறினர்.
அதையடுத்து, சபை நடவடிக்கைகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மாநகர முதல்வர் அறிவித்தார்.
neethan Thursday, 28 July 2011 11:59 PM
ஏன் இந்த ஓர வஞ்சனை? உன் மொழி பேசும் மாற்று சகோதரனுக்கு அநீதி இழைக்கலாமா? மாற்று மொழி பேசும் சகோதரன் நமக்கு அநீதி செய்வதை எப்படியப்பா பிழை கூற முடியும்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .