Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 29 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டத்திலுள்ள சுப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள், கடைகள் போன்ற விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்கும் பொதுமக்களுக்கு மீதியான சில்லறை பணத்திற்கு பதிலாக இனிப்புப் பொருட்களை வழங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வணிகர்கழக உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று வணிகர்கழக மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
வணிகர்கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், வணிகர்கழகச் செயலாளர் ஆர்.ஜெனக்குமார் உபசெயலாளர் எஸ்.சிவகுமார் மற்றும் நிர்வாக அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் சில்லறைக் காசுக்கு பாரிய தட்டுப்பாடு காணப்பட்டது. இதனால் வர்த்தகர்கள் தம்மிடம் பொருட்களை வாங்கும் பொதுமக்களுக்கு சில்லறைப் பண மீதிக்குப் பதிலாக இனிப்புப் பண்டங்களை வழங்கி வந்தனர். இத்தகைய நடவடிக்கை பொதுமக்களை அசௌகரியத்திற்க்கு உள்ளாக்கியதுடன், வர்த்தகர்களின் நன்மதிப்பும் பாதிக்கப்பட்டு வந்தது. இது சம்பந்தமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் பொதுமக்களும் எமது கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
நாம் இது சம்பந்தமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் வங்கிகளுடன் தொடர்புகொண்டு சில்லறைக்காசு தேவைப்படுவதாக தெரிவித்ததையடுத்து, வங்கிகள் சில்லறைக்காசு வழங்க இணங்கியுள்ளனர். எனவே, இதுவரை காலமும் இருந்த சில்லறைக் காசுக்கான தட்டுப்பாடு எதிர்காலத்தில் இருக்காது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .