2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். நூலகத்தின் சிறுவர் பகுதி உத்தியோகபூர்வமாக மாநகர சபையிடம் ஒப்படைப்பு

A.P.Mathan   / 2011 ஜூலை 29 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் சிறுவர் பகுதி - சிங்கப்பூர் சர்வதேச நிறுவனத்தினரால் மேம்படுத்தப்பட்ட சிறுவர் நூலகமாக நவீன மயப்படுத்தப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக யாழ். மாநகரசபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு சிங்கப்பூர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜேர்ச் ஜோ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாநகரசபை மேயர் ஜோகேஸ்வரி பற்குணராசா, மாநகரசபை ஆணையாளர் சரவணபவன், மற்றும் சிங்கப்பூர் சர்வதேச நிறுவனத்தின் கவர்ணர் வினோத் குமாரசாமி மற்றும் சிங்கப்பூர் சர்வதேச நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பொது நூலகத்தில் குழந்தைகளுக்கான பிரிவை மேம்படுத்துவதன் மூலம் குழந்தைகளிடத்தில் நட்புறவை வளர்த்தல், நூலகர்களின் திறமைகளைப் பலப்படுத்தி குழந்தைகளுக்கு அனுகூலமாகக் கற்றுக்கொள்ள ஓர் இடத்தை தெரிவுசெய்து குழந்தைகளை திடமாக உருவாக்குதல் போன்றவற்றிற்காக இத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக சிங்கப்பூர் சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X