2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மக்களின் புலம் பெயர்வே யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடையக் காரணம்

A.P.Mathan   / 2011 ஜூலை 30 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

 

யாழ். மக்கள் புலம்பெயர்ந்து சென்றமை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்து ஏனைய மாவட்டங்களுக்குச் சென்றமை போன்ற காரணங்களால் ஏற்பட்ட வாக்காளர் வீழ்ச்சியே யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைவடையக் காரணம் எனத் தான் கருதுவதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி தெரிவித்தார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 6 ஆகக் குறையவுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ்.மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில்:

2009ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 5 பேர் வரையில் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்துக்கு 9 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது 2010ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 214 பேர் நீக்கப்பட்டு 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 பேரே வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர். இந்த வாக்காளர் எண்ணிக்கையின் படி 9 ஆசனங்களில் இருந்து 6 ஆசனங்களாக குறைக்கப்படவுள்ளன.

இங்குள்ள மக்கள் பலர் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். இன்றும் பலர் யுத்தம் காரணமாக  வெளிமாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். அத்துடன் சிலர் இந்த மாவட்டத்திலிருந்தும் வாக்காளர்களாக பதிவு செய்யத் தவறியுள்ளனர். இவ்வாறான காரணங்களாலேயே இந்தளவு வாக்காளர் எண்ணிக்கை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனாலேயே நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்படவுள்ளன என்று குறிப்பிட்டார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X