2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கீரிமலையில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பிதிர்க்கடன் கழித்தனர்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 30 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

பிதிர்க்கடன் கழிப்பதற்காக இன்று சனிக்கிழமை அதிகாலை முதல்  கீரிமலை கண்டாங்கி தீர்த்தத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்  குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கூடினார்கள்.

அதிகாலையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து தீர்த்தம் ஆடுவதற்காக கண்டாங்கி தீர்த்தத்திற்கு  புறப்பட்ட  முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் தீர்த்தம் ஆடி மண்டபத்தில் பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன.

பொதுமக்கள் அந்தணர்களுக்கு தானம் கொடுத்து பிதிர்க்கடன் கழித்தார்கள். அத்துடன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன்,   அன்னதானமும் வழங்கப்பட்டன.

இதேவேளை, கடமையில் அதிக எண்ணிக்கையான பொலிஸாரும்  சாரணர்களும்  ஈடுபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X