2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குகநாதன் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான மரண அடியாகும்: குமரகுருபரன்

Super User   / 2011 ஜூலை 30 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீது விழுந்த மரண அடியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி என். குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.  கட்சியின் தலைவர் மனோ கணேசனும், தாமும். ஜ.ம.முன்னணியும்  இதனை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது  என்றால் இந்த பயங்கரவாதம்  எங்கிருந்து வந்தது? முதியவர் குகநாதன் ஒரு அமைதியான உருவம். அவர் மீதான தாக்குதல்  ஆண்டவனே மன்னிக்கமாட்டார்.  

இன்று புலி முடிந்து விட்டது. அன்று மாற்றுக் கருத்திற்கு  இடமில்லை என்றவர்கள்; இன்று சுதந்திரமெல்லாம் கிடைத்துவிட்டதாக தெரிவிக்கப்பவர்கள் சிந்தித்துப்பாருங்கள். இதுவும் மாற்றுக் கருத்தின் மீதான தாக்குதல் தானே? ஏதோ ஒரு சக்தி ஜனநாயகத்திற்கு அப்பால் மாற்றுக் கருத்தை ஜீரணிக்க முடியாமல் இதை செய்துள்ளது.

தொழிலுக்கப்பால் சிந்திக்காத செய்யும் தொழிலே தெய்வம் என்று பணியாற்றும் இப்படியான ஒருவர் மீதான தாக்குதல் மனிதாபிமானத்தின் மீதான அடியாகும். தமிழர் இன்றைய சமகால சூழலில் மற்றவனுடைய உரிமையை மதிக்கத் தக்கவனாகவும், மனிதாபிமானமுடையவனாகவும் வாழ வேண்டும்.  இருக்க வேண்டும்.  தமிழர் வாழ்வு யுத்தத்தின் பின்னும்  எதிர்நீச்சலாகிவிட்டது.  

ஊடக சுதந்திரத்தில் நாம் எங்கே? பிரித்தானியா  எடுத்துக்காட்டும் ஊடக சுதந்திரம் எங்கே ? மேலை தேசம் கட்டும் அடிப்படை மனித உரிமைகள் எங்கே? அந்த நாகரீகம் கண்டு  நாம் பிரமிக்க வேண்டும். நிறையவே சகிப்புத் தன்மை வேண்டும்.

குகநாதன்  விரைவாக சுகம் பெறவேண்டும்  என்று ஜனநாயக மக்கள் முன்னணி பிரார்த்திக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X