2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல் ஊடக சுதந்திரம், ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது: அமைச்சர்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

நாட்டின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியருமான ஞா.குகநாதன் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான இழிசெயலையும் கோழைத்தனத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கின்றது.

நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கில் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தாக்குதல்களுக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வன்மையாக கண்டித்தக்கதாகும். செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றிக்கொண்டு சுதந்திரமாக மக்களுக்காக எழுதிவரும் குகநாதன் என்பவர் நான் நேரில் நன்கறிந்த சிரேஷ்ட ஊடகவியளாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.

இதழியல்த்துறையோடு தம்மை முழுமையாக ஈடுபடுத்தி அர்ப்பண சிந்தையோடு செயலாற்றும் குகநாதன் போன்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்திப் பணியவைக்க எத்தனிப்பதும் அத்தகையோர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களைத் தொடுப்பதும் இலங்கை போன்ற நாடுகளில் ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது. இவ்வாறான இழிசெயலையும் கோழைத்தனத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிக வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X