2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேற்றத்தில் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படவில்லை: யாழ். அரச அதிபர்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழில் மீள்குடியமர்த்தப்படுபவர்களில் முஸ்லிம் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. அவர்களின் மீள்குடியேற்றம் தங்கு தடையின்றி நடைபெறுவதுடன், அவர்களுக்கான நிவாரணங்கள் மீளக்குடியேறிய ஏனைய மக்களுக்கு கொடுப்பதைப் போன்று கொடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையில் முஸ்லிம் சமூகம் மீளக்குடியேறுவதில் உள்ள தடைகள் குறித்து கவனயீர்ப்பு பிரேரணை கொண்டு வரப்பட்டமைக் குறித்து அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் சகோதரர்கள் போன்று வாழ்கின்றனர். எந்தப் பிரதேசத்திலும் இல்லாத  ஒற்றுமை யாழ்ப்பாணத்தில் இருக்கிறது என்றே நான் கருதுவேன். நான் அரசாங்க அதிகாரி. எனக்கு மக்களின் சேவைதான் முக்கியம். தமிழ், முஸ்லிம் மக்கள் என்று என்னால் பிரித்து சேவையாற்ற முடியாது

யாழ். முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரச்சினைகள் இருக்கிறது. அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக அரச உயர்மட்டங்களில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • Thamby Monday, 01 August 2011 09:05 PM

    I appreciate your services doing for both communities without partiality.

    Reply : 0       0

    rishad Wednesday, 03 August 2011 06:57 PM

    நல்லா வாசிக்கிறிங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X