2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழா ஒக்டோபரில்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

இப்பட்டமளிப்பு விழாவில் கலாநிதி, முதுமாணி, இளமாணி, பட்டப்பின் டிப்ளோமா, டிப்ளோமா ஆகிய பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

தேர்வுக்காலம் 2010 ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் சித்தியடைந்து பட்டம் பெறத் தகுதியானவர்கள் இவ்வருடம் செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை சமர்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்

இப்பட்டமளிப்பு விழா தொடர்பாக மேலதிக விபரங்களைப் பெற விரும்புவேர் யாழ். பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்துடன் தெடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X