2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் மீளக்குடியேறியவர்களுக்கு வீடு வழங்க தொண்டுநிறுவனங்கள் முன்வரவேண்டும் - யாழ். அரச அதிபர்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் மீளக் குடியேறியவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு தொண்டு நிறுவனங்கள் முன்வந்து செயற்பட வேண்டும் எனவும் உலக வங்கி, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசின் வீட்டுத்திட்ட உதவியின் கீழ் 22,945 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் 13 ஆயிரத்து 261 வீடுகளும், அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியின் கீழ் 2ஆயிரத்து 239 வீடுகளும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 7ஆயிரத்து 400 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்.மாவட்டத்தில் மொத்தம் 60,000 வீடுகள் இன்னமும் தேவையாக உள்ளது எனவும் மீளக்குடியேறிய மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க தொண்டு நிறுவனங்கள் முன் வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X