Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். கோப்பாயில் சடலமாக மீட்கப்பட்ட ஆண், பெண் இருவரும் கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர் என்றும் இவர்களின் உடல்களில் உட்காயங்கள் பல காணப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் சிவரூபன் தெவித்துள்ளார்.
கோப்பாயில் இராச வீதியிலுள்ள காணி ஒன்றில் பனைமரத்தில் தூக்கில் தொங்கிய அருளன் தனபாலசிங்கம் (வயது 43) மற்றும் இந்துஷா (வயது 24) ஆகிய இருவரின் மரணம் தொடர்பாக உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தமையை அடுத்து பொலிஸாரின் விசாரணைக்காக சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பின்னரே சடலங்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளன என்று சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இன்று இந்த இருசடலங்களின் பிரேத பரிசோதனை அறிக்கை யாழ். நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
aj Saturday, 13 August 2011 11:21 PM
விசாரணை, நீதி என்று எதுமே எதிர்பார்க்க வேண்டாம்
அதுவும் குறிப்பாக தமிழர்கள்.
ரிப் :sad:
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago