2025 மே 19, திங்கட்கிழமை

'யாழ். பெண்களுக்கு தனியான போக்குவரத்து சேவை வேண்டும்'

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு என பிரத்தியேக போக்குவரத்து சேவையினை ஏற்படுத்துமாறு யாழ்.மாவட்ட மகளீர் அபிவிருத்தி நிலையம் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

 

யாழில் பெண்களுக்கு என போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதன் மூலம் பெண்கள் தனித்துவமாக பேரூந்துகளின் பயணம் செய்ய முடியும். கொழும்பில் பெண்களுக்கு தனியான போக்குவரத்து சேவை வழங்கப்படுவதைப் போன்று யாழ்ப்பணத்திலும் அச் சேவையை ஏற்படுத்துமாறு கோரியுள்ளனர்

யாழ்.பெண்களின் தனித்துவ உரிமைகள் இச் சேவை ஏற்படுத்துவதன் மூலம் பாதுகாக்கப்படும் என்றும் விரைவில் இச்சேவையை ஏற்படுத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு தங்கள் அமைப்பின் சார்பாக கோரிக்கை விடுவதாக யாழ்.மாவட்ட மகளீர் அபிவிருத்தி நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


 


You May Also Like

  Comments - 0

  • Yaseenbawa Hussain,Pottuvil. Wednesday, 17 August 2011 07:02 PM

    கிரீஸ் மனிதன் பிறந்த பிறகு தனியாக அதுவும் பெண்கள் மட்டும் .... ஆண்களே பயமாக இருக்கும் போது உங்களுக்கு வந்த துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியாது பெண்களே! தனியாக தாராளமாக போங்கள்.

    Reply : 0       0

    meenavan Wednesday, 17 August 2011 08:20 PM

    சாரதியும், நடத்துனரும் கிரீஸ் மனிதர்களாக மாறாதிருக்க வேண்டும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X