2025 மே 19, திங்கட்கிழமை

மழைக்காலத்தில் தற்காலிக கூடாரங்களில்; வசிக்க முடியாது: மீளக்குடியேறிய மக்கள்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் தற்காலிக கூடாரங்கில் வசித்துவரும் மீளக்குடியேறிய மக்கள் மழைக்காலம் நெருங்குவதினால் தங்களினால் அக் கூடாரங்களில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது குறித்து வடமராட்சி கிழக்குப் பகுதி பிரதேச செயலளர்களிடம் முறையிட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் திருலிங்கநாதன் தெரிவித்தார்.

மீளக்குடியேறிய பின்னரும் தங்களுக்கான எந்தவித வீட்டுத்திட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் தற்காலிக கூடாரங்களை அமைத்து அதில் வசித்து வருவதாகவும் மழைக்காலம் ஆரம்பித்தால் தங்களால் கூடாரங்களில் வசிக்க முடியாது எனவும் தங்களுக்கு வீட்டுத்திட்டங்களை அமைத்து தரும்படி இவர்கள் கோரியுள்ளனர்.

மீளக்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் நிரந்தர குடியிருப்புத் திட்டங்களை அமைத்து அங்கு குடியேற்றுமாறும் அத்தோடு அழிவடைந்த தங்களது வீடுகளைத் திருத்தி வசிப்பதற்குரிய ஒழுங்குகளையாவது மேற்கொண்டு தரும்படி கோரியுள்ளதாக வடமராட்சி கிழக்குப் பகுதி பிரதேச செயலாளர் திருலிங்கநாதன் தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X