Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் மீள் குடியேறிவரும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் பணி தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகிறது எனவும் இதற்கமைய அரச சார்பற்ற நிறுவனமான சமூக அபிவிருத்தி நிலையத்தால் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 400 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட செயலகத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரச சார்பற்ற நிறுவனங்களான யு.என்.டி.பி, போரூட், சமூக அபிவிருத்தி நிலையம், யு.என். ஹபிற்றர், கரித்தாஸ் கியூடெக், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், கலாசாரத்திற்கும் அபிவிருத்திக்குமான முஸ்லிம் அமைப்பு, ஓ.எம்.ஐ என்பனவற்றால் இந்த வீடுகள் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் சமூக அபிவிருத்தி நிலையத்தால் 277 வீடுகள் ஏற்கனவே அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 123 வீடுகள் இந் நிறுவனம் அங்கு அமைத்துக் கொடுக்கவுள்ளது.
மேலும் யு.என்.டி.பி நிறுவனத்தால் தெல்லிப்பழை, சண்டிலிப் பாய் ஆகிய பிரதேசசெயலர் பிரிவுகளில் 161 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. அத்தோடு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் 350 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இவை தவிர போரூட் நிறுவனம் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 9 வீடுகள் அமைத்துக் கொடுக்கவுள்ளது. யு.என்.ஹபிற்றர் நிறுவனத்தால் ஆயிரத்து 81 வீடுகள் மருதங்கேணி, பருத்தித்துறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
ஓ.எம்.ஐ. நிறுவனத்தால் நல்லூர் பிரதேசத்தில் 40 வீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுத விர கலாசாரத்திற்கும் அபிவிருத்திக்குமான முஸ்லிம் அமைப்பால் யாழ்ப்பாணத்தில் 10 வீடுகளும் நல்லூர், வேலணை, மருதங்கேணி, சண்டிலிப்பாய் ஆகிய இடங்களில் கரித்தாஸ் கியுடெக் நிறுவனத்தால் 241 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் அப் பகுதியில் இதே நிறுவனத்தால் 49 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரச சார்பற்ற நிறுவனங்களால் யாழ். மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் மீள் குடியேறி வாழும் குடும்பங்களுக்காக இந்த வீடுகளை இந்நிறுவனங்கள் முன்வந்து அமைத்துக் கொடுக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago