Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தமிழர்களின் தாயக பூமியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இன்று சனிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"உள்ளூராட்சி சபைகளை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவிகளையும், நிதியை எவ்விதம் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக அவர்களோடு ஆலோசித்து செயற்படவுள்ளோம்.
தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக அரசுக்கு பேச்சுவார்தைகளின் போது பல விடயங்களை எடுத்துக் கூறினோம். ஆனால் அரசு அதனை இதய சுத்தியுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் நிலை தொடர்பாக இலங்கை அரசு இன்னமும் உணரவில்லை.
தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்து எதிர்வரும் காலங்களில் முக்கியமான முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன்,எஸ்.ஸ்ரீதரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், பொன்.செல்வராசா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
meenavan Sunday, 21 August 2011 04:22 AM
ஐயா உண்மையே கூறினீர்கள். உங்களது கருத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் எந்தளவு ஆதரவு தருவார்களோ? அரசு இதய சுத்தியுடன் இல்லை என்பதும் உண்மை.
Reply : 0 0
jampavan Sunday, 21 August 2011 06:36 AM
ஐயா புலம் பெயர் தமிழர்கள் அபிவிருத்திக்கு உதவி செய்தால் எதற்கையா ஒரு அரசு? அங்கு ஒரு தேர்தல்? அதன் பெயரால் கொலைகள்
Reply : 0 0
Pulavan Monday, 22 August 2011 05:40 PM
முதலில் ஒரு நிரந்தர தீர்வை அடைவோம். பின்னர் அபிவிருத்தி என்றால் என்ன, ஆலோசனை என்றால் என்ன புலம் பெயர் தமிழர் நிச்சயம் உதவுவார்கள். தீர்வை அரசு எப்போ வழங்கும்? அல்லது மாறி மாறி தமிழர்களை பயமுறுத்தும் விளையாட்டுக்கள் தொடருமா?
Reply : 0 0
bzukmar Monday, 22 August 2011 09:09 PM
தீர்வு விடயத்தில் பேரினவாதிகள் காலவிரயத்தையே தொடர்வர்.அதுவரை வாழ்வாதாரத்திற்கு அல்லலுறும் மக்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் நம்மவர் தான் உதவிபுரிய வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago