Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டை நேற்று திங்கட்கிழமை இரவோடு இரவாக இராணுவத்தினர் இடித்து அழித்து இருந்த இடம் தெரியாது அகற்றி உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்
இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று திங்கள் இரவு 10.15 மணியளவில் பிரபாகரனின் வீட்டுக்கு இரண்டு டிப்பர்கள், ஒரு பெக்கோ இயந்திரம் சகிதம் வந்த படையினர் நள்ளிரவு வரை இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்தனர்.
பிரபாகரனின் வீடு ஏற்கனவே இராணுவத்தினரால் இடித்து உடைக்கப்பட்டிருந்தது. தெற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து வீடு உடைக்கப்பட்டது. தற்போது வீட்டின் இடிபாடுகள் அத்திபாரத்துடன் கிண்டிக் கிளறி அகற்றப்பட்டுள்ளன. அந்த இடத்தில் ஒரு வீடு இருந்த இடமே தெரியாது செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வடபகுதிக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு நேற்றிரவு அழிக்கப்பட்டதென்ற குற்றச்சாட்டை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர லக்ஷ்மன் ஹுலுகல்ல மறுத்துள்ளார்.
bis Tuesday, 23 August 2011 03:50 PM
அதை வைத்திருந்து என்ன செய்யப் போகிறிர்கள்? அரசியல் வியாபாரம் நடத்தவென்றால் உதவும். தமிழ் மக்களுக்கு எதுவும் விளையாது!
Reply : 0 0
bzukmar Tuesday, 23 August 2011 04:42 PM
உல்லாச பிரயாணிகளிடம் இருந்து நிதி திரட்டும் ஒரு மையமாக பயன்படுத்தி இருக்கலாம். அதையுமா நிர்மூலம் செய்து விட்டனர்?
Reply : 0 0
Thamby Tuesday, 23 August 2011 04:58 PM
Mr.Sivajilingam, why you interest to keep Prapakaran house as same?
Reply : 0 0
maluwa Tuesday, 23 August 2011 05:09 PM
இப்ப நீங்க என்ன செய்ய சொல்றீங்கள்? ஒரு இனமே இருந்த இடம் தெரியாமல் போககூடிய காலம் இது!.
Reply : 0 0
aj Tuesday, 23 August 2011 07:26 PM
அளவுக்கு அதிகமான அடக்குமுறை, அளவுக்கு அதிகமான இன வெறி , அளவுக்கு அதிகமா ஆட்டம் . எப்படி ஆடியவர்கள் எல்லாம் என்ன ஆனவர்கள் என்று நாங்கள் பார்த்துகொண்டு தான் இருக்கிறோம் . பிரபாகரன் வீட்டை இடித்துவிட்டால் எல்லாம் மறைந்துவிடும் என்று மொட்டு **** எண்ணுகிறது . பிரபாகரன் என்பது ஒரு வரலாறு . அவர் எப்போதுமே தமிழ் இன வரலாற்றில் இருப்பார் . இவ்வாறான செயல்பாடுகள் குறுகியக சந்தோசம் சிங்களத்துக்கு கொடுக்கலாம். இதே செயல்பாடுகள் தான் புலிகள் வருவதுக்கு முன்னரும் இங்கு நடந்தது. சிங்களத்தின் செயல்பாடே புலிகள் வர காரணம். ஆனால் மீண்டும் செய்த தவரே செய்துகொண்டு இருக்கிறார்கள் . வீட்டை இடிப்பது மட்டும் இல்லை. இது உண்மையான நல்லிணக்கம் , அமைதிக்கு ஒரு போதும் வழிவகுக்காது. எது கற்றுக்கொண்ட பாடம் என்று எல்லாம் குழுக்கள் பெயருக்கு மட்டும் வைத்து இருக்கிறார்கள் . இவை தான் நீங்கள் கற்றுகொண்டிர்கள் ? ஒரு இனத்தை அழித்து, நீதிகள் மறுக்கப்பட்டு, அடையலாம் அழிக்கப்பட்டு, தேவைகள் மறுக்கப்பட்டு எழுப்பப்படும் அபிவிருத்தி / அமைதி நீடித்ததாக வரலாறு இல்லை.
Reply : 0 0
asker Tuesday, 23 August 2011 08:50 PM
பல லட்சகணக்கான தமிழ் ,சிங்களம் , முஸ்லிம் மக்களையும் புனித வணக்கதலங்களையும் அளித்தவன் இப்படிதான் ஆகுவான். இல்லாவிட்டால் சிலை வைத்து வணங்குவார்கள்.இவ்வாறு அளிக்கப்பட்டது சபாஷ் ............
Reply : 0 0
xlntgson Tuesday, 23 August 2011 09:04 PM
aj பிரபாகரனைப் புகழ்வதும் உண்மையான நல்லிணக்கம் , அமைதிக்கு ஒரு போதும் வழிவகுக்காது! நீத்தார் நினைவோ?
Reply : 0 0
Thaajudeen Tuesday, 23 August 2011 10:08 PM
அழிந்து போனதைப் பற்றி பேசாமல், இப்போது கிரிஸ் மனிதர்களால் அழிந்து கொண்டிருக்கும், பயந்து மிரண்டு கிடக்கும் மக்களைப் பற்றி நீங்கள் பேசுவீர்களா?
Reply : 0 0
AJ Tuesday, 23 August 2011 10:46 PM
@xlntgson : நிஜத்தை சொன்னால் என்று நீங்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறிங்க.
@:asker: அப்போது சுமார் 140000 மக்களை இன அழிப்பு செய்த , இன்றும் வடக்கு கிழக்கில் கோவில்கள் , வாசிகசாலை , தமிழர்களின் சொத்துக்கள் என்று எல்லமே அழித்தவர்களை நாங்களும் மறந்துவிடவில்லை.
Reply : 0 0
vaasaha Wednesday, 24 August 2011 01:18 AM
அதை நிர்மூலம் செய்தால் யாருக்கு லாபமோ அவர்கள் செய்துள்ளார்கள். யாருக்கு அது வலிக்குமோ அவர்கள் ஆட்சேபிக்கிறார்கள். ஆனால் சிலருக்கு அவர்களின் அபிப்பிராயம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்கவே தெரியவில்லையே என்பதுதான் நமது சாபக்கேடு.
Reply : 0 0
xlntgson Wednesday, 24 August 2011 09:31 PM
aj நன்றி நீத்தார் நினைவு, நிஜம்! புகழ்ச்சிகள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை அநேகம்... இட்டுக்கட்டுபவை தான். நான் பெரும்பாலும் புகழ்ச்சியை விரும்புவன் நீங்கள் எப்படியோ?
Reply : 0 0
asker Wednesday, 24 August 2011 11:26 PM
aj செத்த மாட்டிற்கு விலை illai
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago