2025 மே 19, திங்கட்கிழமை

நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே புகைப்படப் பிடிப்பாளர் கைது: பிரதி பொலிஸ்மா அதிபர்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியை புகைப்படம் எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பொலிஸாருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே யாழ். நீதிமன்ற வளாகத்தில் வைத்து புகைப்படப் பிடிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரும் யாழ். மாவட்டத்துக்கான பதில் பிரதி பொலிஸ் மா அதிபருமான நீல் தலுவத்த - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

யாழ். நாவாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான பொதுமக்கள் சிலரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றுகையில், அதனை புகைப்படம் எடுத்த புகைப்படப் பிடிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த புகைப்படப் பிடிப்பாளரின் கைது இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • hakeem Tuesday, 23 August 2011 09:16 PM

    புகைப்படப்பிடிப்பாளரை கைது செய்வதை விட்டுவிட்டு, பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கைது செய்வது நன்று!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X