2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் ஜ.ம.சு.கூ. சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிக

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் யாழ். நூலக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் பாரம்பரிய சிறுகைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X