2025 மே 19, திங்கட்கிழமை

அராலி மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். அராலிப் பகுதியிலுள்ள பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக ஹற்றன் நஷனல் வங்கியினால் அராலி மாதா  கோவிலடிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர்த்தாங்கி பாவிக்கப்படாது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த குடிநீர்த்தாங்கி நிர்மாணிக்கப்பட்டு வலி. மேற்கு சங்கானை பிரதேசசபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்தருணத்தில் மேற்படி பிரதேசசபையானது அரசாங்க நிர்வாகிகளின் கைகளில் இருந்தமையால் அதனை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் குறிப்பிடப்படுகிறது.

தற்போது மக்களுடைய பிரதிநிதிகளைக் கொண்டதாக இச்சபை காணப்படுவதால் இதனை பயன்படுத்தி அராலிப் பகுதி மக்களுடைய குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்துவைக்க  முன்வர வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து அராலிப் பகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட த.நடனேந்திரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,  சபையின் தவிசாளருடைய கவனத்திற்கு இது குறித்து கொண்டு வந்துள்ளதாகவும் அடுத்த சபைக் கூட்டத்தில் இது சம்பந்தமாக ஏனைய சபை உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி சாதகமான தீர்மானம் எடுக்கப்படுமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X