2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் மாபெரும் விவசாயக்கண்காட்சி

Super User   / 2011 செப்டெம்பர் 04 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்,கவிசுகி)

 'இயற்கையுடன் இணைந்த நிலைபேறான விவசாயத்தை நோக்கி' எனும் தொனிப்பொருளில் விவசாயக் கண்காட்சி நாளை திங்கள் கிழமை 05 திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய பயிற்சி நிலைய தொகுதியில் வட மாகாண விவசாய அமைச்சினால் நடத்தப்படவுள்ளது.

இக்கண்காட்சியில் சுற்றுப்புற சூழலுக்கு இணக்கமான தொழில்நுட்ப உத்திகள், உள்ளூர் முறைமைகள், சிறந்த வளப்பயன்பாட்டு நுட்பங்கள், உற்பத்தி செலவு குறைந்த விவசாய முறைகள், தனியார்துறையினருக்கும் உள்ளூர் தொழில் முனைவோருக்குமிடையில் தொடர்புகளை ஏற்படுத்தல் போன்ற திட்டதிற்காக இக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறு தொழில் முயற்சிகளுக்கான உதவிகள், தொழில்நுட்பங்கள் என்பனவற்றை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்களை உருவாக்குதல் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக  இக்கண்காட்சி ஏற்பாடுக்குழு அறிவித்துள்ளது
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X