2025 மே 19, திங்கட்கிழமை

வடக்கில் மண்ணின் மகிமை ('பிம் சவிய') காணி உரித்துப்பதிவு சான்றிதழ் வழங்கும் செயற்திட்டம்

Super User   / 2011 செப்டெம்பர் 04 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் 'மண்ணின் மகிமை' - காணி உரித்துப்பதிவு சான்றிதழ் வழங்கும் திட்டமானது வடமாகாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் சகல காணித்துண்டுகளுக்குமாக வரைபடம் நில அளவைத்திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு காணித்துண்டுக்கும் தனியான அடையாள இலக்கம் வழங்கப்படும்.

குறித்த காணித்துண்டுக்கான உரிமையாளரை ஓர் விசாரணையின் பின் தீர்மானித்து அவருக்கு காணியின் உரிமையை பதிவு செய்து அரச உத்தரவாதத்துடன் ஓர் உரித்து பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.

இது தவிர ஏனைய மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற காணிப்பிரச்சனைகளை தீர்த்து வைத்தல் தொடர்பாக காணி ஆனைணயாளர் நாயகத்தினால் சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களையும் உரிய பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக வடமாகாணத்தில் காணி உரித்து வழங்குவதற்காக நல்லூர், கரைச்சி, முசலி, கரைதுறைப்பற்று, வவுனியா வடக்கு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தங்களது காணி உரித்தை பதிவு செய்து அரச உத்தரவாதத்துடன் வழங்கப்படும் உரித்துச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மாகாண காணி நிர்வாகத்திணைக்களம்  ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளுமாறும் மேலதிக விபரம் தேவைப்படுவோர் www.bimsaviya.gov.lk எனும் இணையத்தளம் அல்லது    npland@sltnet.lk    எனும் மின்னஞ்சல் மற்றும் 021-2220836, 021-3215539 தொலை பேசி மூலம் தெடர்பு கொள்ளலாம் என வடமாகாண சபை அறிவித்துள்ளது
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X