2025 மே 19, திங்கட்கிழமை

'யாழ். குடா நாட்டில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் சீர்குலைக்க நடவடிக்கை'

Super User   / 2011 செப்டெம்பர் 05 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடா நாட்டில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் சீர்குலைப்பதற்கு சில சக்திகள் முயன்றுவருகின்றன. அவர்களை பொதுமக்கள் இனம் காண வேண்டும் என கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரும் யாழ். பதில் பொலிஸ் மா அதிபருமான நீல் தலுவத்த தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை மாலை யாழ். வீரசிங்க மண்டபத்தில் சிவில் பாதுகாப்பு குழுக்களை நியமித்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

யாழ். மக்களின் பாதுகாப்பில் பொலிஸார் அதிக அக்கறை எடுத்து செயற்பட்டு வருகின்றார்கள். தமிழ் சமூகத்தின் அபிவிருத்திற்கும் மேம்பாட்டிற்கும் எதிராக சிலர் செயற்படுவதை அண்மை கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

சிவில் பாதுகாப்பு குழுக்கள் பொலிஸாருடன் இணைந்து வேலை செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.  அக்குழுக்கள் தங்கள் பிரதேச மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பவர்களாக இருப்பார்கள்.

அக்குழுக்களுக்கு என பொலிஸ் நிலையங்களில் அலுவலகம் ஒன்றையும் அமைக்கவுள்ளதோடு அவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதற்கான அடையாள அட்டையும் வழங்கவுள்ளோம்

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இருப்பார். இக்குழு ஒவ்வொரு மாதமும் கூடி மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் என்றார்.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகை தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவில் பத்மதேவா, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலமை  பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா மற்றும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X