Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 08 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழில். சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் அரசாங்கத்தின் பின்னணியிலேயே அரங்கேற்றப்படுவதாக கூறி அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாநகர சபை இன்று ஒரு மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை காலை யாழ். மாநாகர சபையின் 8 ஆவது கூட்டத் தொடர் யாழ்.மாநாகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் ஆரம்பமானது.
இக்கூட்டத் தொடர் ஆரம்பித்த உடன் யாழ்.முதல்வரிடம் விசேட அனுமதியைப் பெற்று எதிர்கட்சி உறுப்பினர் முடியப்பு றெமிடியஸ் கிறீஸ் மனிதன் தொடர்பாக பிரேரனை ஒன்றைக் கொண்டுவந்து உரையாற்றினார்.
'கிறீஸ் மனிதன் பின்னணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இருப்பதாகவும் எமக்கு வாக்களித்த மக்கள் மர்ம மனிதன் தாக்குதலில் பாதிக்கப்பட்டு மிகவும் சொல்லண்ணா துயரத்தில் தவிப்பதாகவும் கூறிய அவர், ஜனநாயகப் பண்புகளோடு நாம் அனைவரும் அந்த கிறீஸ் மனிதன் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சபையின் கூட்டத் தொடரை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையை அடுத்து பிரதி முதல்வர் இளங்கோ றீகன் அந்தப் பிரேனைக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். மாநாகரசபை ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களினால் இப்பிரேரனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒரு மணித்தியாலம் சபையை ஒத்திவைக்குமாறு சபை உறுப்பினர்கள் கோரியதால் சபை ஒரு மணிநேரம் முதல்வரினால் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோது ஆளும் தரப்பு உறுப்பினர் எஸ். விஜயகாந்தினால் யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தொரிவித்து கவனயீர்ப்பு பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு சபை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago