2025 மே 19, திங்கட்கிழமை

கோயில் திருவிழாவுக்கு சென்றவர் வீட்டில் திருடர்கள் கைவரிசை

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 08 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத் தேர்திருவிழாவிற்கு சென்றவரின் வீட்டில் இருந்து சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகள் மற்றும் பணம் திருட்டுப் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து விட்டு ஆலயத்திற்கு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதைப் பார்த்து திகைப்படைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்த வேளையில் வீட்டின் உட்புறம் இருந்த அலுமாரிகள் யாவும் திறக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் அங்கிருந்த சங்கிலி மோதிரம் போன்றன திருட்டு போயுள்ளதையும் கண்டுள்ளார்.

இது விடயமாக தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Saturday, 10 September 2011 04:33 AM

    வீட்டுக்காரருக்கு அங்கு திருவிழா. திருடர்களுக்கு இங்கு திருவிழா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X