2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்., கிளிநொச்சிப் பாடசாலைகளில் முறைப்பாட்டுப் பெட்டிகள்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் மற்றும்  கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் பொலிஸ் முறைப்பாட்டுப் பெட்டிகளை வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரும் யாழ். பதில் பொலிஸ் மா அதிபருமான நீல் தலுவத்த தெரிவித்துள்ளார்.

சுன்னாகப் பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  இந்த நிலையிலேயே இந்த இரு மாவட்டங்களிலுமுள்ள  பாடசாலைகளில் பொலிஸ் முறைப்பாட்டுப் பெட்டிகளை வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாடசாலைகளில் இவ்வாறு முறைப்பாட்டுப் பெட்டிகளை வைக்கும்போது பாதிக்கப்பட்ட மாணவர்கள்  முறைப்பாடுகளை செய்ய முடிவதுடன், அவர்களை இத்தகைய துஷ்பிரயோக நடவடிக்கைகளிலிருந்தும் பாதுகாக்க முடியுமெனவும் நீல் தலுவத்த குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X