2025 மே 19, திங்கட்கிழமை

பொலிஸாருக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கை எடுக்கும் வரை சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பு தொடரும்: றெமிடியஸ்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நீதிமன்றத்தில் வைத்து பிணையில் நீதிவானால் விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக சம்மந்தப்பட்ட பொலிஸாரிடம் விசாரணையை மேற்கொள்ள கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் அதிகாரிகள் குழு யாழ். வருகை தரவுள்ளதாக சட்டத்தரணி மு.றெமிடியஸ் நேற்று மாலை தெரிவித்துள்ளார்

நீதிமன்றில் வைத்து கடந்த திங்கட்கிழமை சந்தேக நபர் தாக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தில் பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறியதாக சட்டத்தரணி மு.றெமியஸ் தெரிவித்தார்.

இந்த விசாரணைகள் முடிவடைந்து சம்மந்தப்பட்ட பெலிஸாருக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கை எடுக்கும் வரை யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டத்தரணிகளாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X