Kogilavani / 2011 செப்டெம்பர் 29 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழக ஊடகவளப் பயிற்சி நிலையத்தினால் கடந்த இரு வாரங்களாக நடத்தப்பட்டு வந்த 'ஊடகவியலில் புலனாய்வும் அரசியலும்' என்னும் குறுங்காலப் பயிற்சி நெறியில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழக ஊடக வள பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக ஊடக வள பயிற்சி நிலையப் பணிப்பாளர் எஸ்.தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குறுங்கால பயிற்சி நெறியில் பங்கேற்ற மாணவர்கள், ஊடகத்துறை சார்ந்தோர் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோர் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வளவாளரான நமிபிய நாட்டைச் சேர்ந்த சர்வதேச ஊடகவியலாளர் வில்லி ஒலிவியே மற்றும் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்களும் கலந்துக்கொண்டனர்.
.jpg)

.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .