Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 24 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இனந் தெரியாத நபர்களினால் இன்று தாக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று மாலை தெரிவித்துள்ளது .
யாழ். பல்கலைக்கழக கலைத்துறை நான்காம் வருட மாணவரான ராஜவரோதயன் கவிதாஸ் (வயது 26) இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தைச் செர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் ராஜவரோதயன் கவிதாஸ், கிளிநொச்சி - பரந்தன் பூநகரி வீதியை அண்மித்த பகுதியில் வைத்து இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினரினால் பொல்லுகளினாலும் இரும்புக் கம்பிகளினாலும் அவர் வீட்டில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாகவும் தவபாலன் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலன் மேலும் தெரிவித்துள்ளார்
Miflan Tuesday, 25 October 2011 02:24 AM
சுதந்திரமான இந்த நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாதா??? எப்பதான் விடிவு வருமோ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
3 hours ago