2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்தினால் செயற்கை கால்கள், ஊன்று சாதனங்கள் அன்பளிப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 25 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கோவில் வயல் கிராம அதிகாரி பிரிவிலுள்ள வலுவிழந்த பொதுமக்களுக்கு இயக்கச்சியிலுள்ள இராணுவத்தின் 552ஆவது படையணி, செயற்கைக் கால்கள் மற்றும் ஊன்று சாதனங்களை இலவசமாக வழங்கியது.

கோவில் வயல் கிராம அதிகாரியின் அலுவலகத்தில் ஆண்கள், பெண்கள் அடங்கலாக 19 பேருக்கான இந்த செயற்கை உறுப்புக்கள், சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

'மோட்டிவேஷன்' (ஊக்கல்) மற்றும் வலுக்குறைந்தோருக்கான மையம் எனும் அமைப்புக்கள் இணைந்து இந்த சாதனங்களை அன்பளிப்பாக வழங்க இராணுவத்தினருக்கு உதவி வழங்கியுள்ளனர்.

552ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக்க, நன்கொடை அமைப்புக்களின் அலுவலர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X