Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 31 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்தவர்களது விரலடையாளங்களையும் புகைப்படங்களையும் கணனிமயப்படுத்தல் செயற்திட்டத்தின் கீழ் விசேட கலந்தாய்வரங்கு யாழில் நடைபெற்றுள்ளது.
யாழ்.பிராந்திய தொழில் திணைக்களத்தில் இன்று திங்கள் கிழமை நடைபெற்ற இந்தக் கலந்தாய்வரங்கில் ஊழியர் சேமலாப நிதியை இலகுவாகப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் நிதி மோசடிகளைத் தடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை நான்கு பிரதேச செயலகர் பிரிவுகளில் இந்த ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்தவர்களது விரலடையாளங்களையும் புகைப்படங்களையும் கணனிமயப்படுத்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு யாழ்.மாவட்டத்தில் 90 வீதமான நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதித்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆறு மாதங்களில் 382 நிறுவனங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விசேட கலந்தாய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
53 minute ago