Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 31 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் பின்வரும் இடங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
02ஆம் திகதி புதன்கிழமை, 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 03ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், புன்னாலைக்கட்டுவன் வடக்கு, தெற்கு, மயிலங்காடு பிரதேசத்தின் ஒரு பகுதி, ஈவினை பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 05ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
iklad ila venthan Tuesday, 01 November 2011 05:04 AM
போரில் தந்த கொடுமை போதாதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago