2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கணவரை இழந்த பெண்ணுக்கு இராணுவத்தினரால் இலவச வீடு கையளிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 03 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இராணுவத்தினரின் மனிதாபிமானப் பணிகளின் கீழ் யாழ். அரியாலை பகுதியில் 4 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு ஒன்று, இன்று வியாழக்கிழமை உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.

512ஆவது பிரிவுக்குட்பட்ட இராணுவத்தினரின் நிதியின் மூலம் கட்டப்பட்ட இந்த வீட்டினை அப்படைப்பிரிவின் தளபதி ஏ.பி.விக்கிரமரட்ண,யுத்ததினால் கணவனை இழந்து ஒற்றைக் காலையும் இழந்த ஜந்து பெண்பிள்ளைகளின் தாயான சிவகுமார் ரஞ்சிதமலரிடம் கையளித்தார்.

இந்த வீட்டினை இராணுவ பொறியியல் பிரிவினரின் உதவியுடன் இராணுவத்தினர் கட்டிக் கொடுத்துள்ளனர். இந்த வீடு கையளிக்கும் நிகழ்வுக்கு 511ஆவது படைத்தளபதி லெபடினல் கேணல் ரணசிங்க, 512ஆவது படைத்தளபதி கேணல் வீரசூரிய, யாழ்.பொலிஸ் நிலைய தலமைப்பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா மற்றும் இராணுவ உயர்நிலை அதிகாரிகள், நல்லூர் பிரதேச செயலர் எஸ்.செந்தில் நந்தனன், கிராமசேவையாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X