Suganthini Ratnam / 2011 நவம்பர் 08 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் தனியார் பாடசாலையொன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அதன் மூலம் வேலைவாய்ப்பை வழங்குவதாகவும் கூறி அங்குள்ள இளைஞர், யுவதிகளிடம் பண மோசடி செய்தததாக கூறப்படும்; மூன்று பேர் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்தே பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
பத்திரிகை விளம்பரமொன்றைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வுக்கு 100க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தோற்றியதாகவும் இவர்களிடம் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி செய்துள்ளதாகவும் யாழ். பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேர்முகத்தேர்வுக்கு தோற்றிய இளைஞர், யுவதிகளிடம் விண்ணப்படிவத்திற்காக 100 ரூபாவும் வேலை செய்வதற்கான அனுமதிக்கடிதத்திற்காக 2500 ரூபாவும் அறவிட்டதாகவும் யாழ். பொலிஸார் கூறினர்.
இதில் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் தற்போது தமது முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago