Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 03 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
போருக்கு பின்னரான யாழின் அபிவிருத்தி நிலமைகளை ஆராய்வதற்காக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் மற்றும் அவரது குழுவினர் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்.வரும் இவர்கள் யாழில் அரசினால் முன்னெடுகப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக நாளை புதன்கிழமை மாலை 4 மணிக்கு அரச அதிபரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அத்தோடு வடமாகாண சபையின் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் வடமாகாண சபை தமிழ் மக்களுக்கு ஆற்றிவரும் பங்களிப்பு தொடர்பாக நாளை மறுதினம் வியாழக்கிழமை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியைச் சந்தித்து கலந்;துரையாடவுள்ளனர.
மதங்கள் ரீதியான ஒற்றுமை இனங்களுக்கிடையில் யாழில் எவ்விதம் இருப்பது தொடர்பாக யாழ்.ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தரநாயகத்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
51 minute ago
1 hours ago
3 hours ago